×

கனவு ஆசிரியர் விருதுக்கு 10 பேர் தேர்வு

 

கோவை, நவ. 29: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. தவிர, அரசு பள்ளிகளில் கற்பித்தலில் சிறந்த ஆசிரியர்களுக்கு தனியாக கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஆன்லைன் வழியில் தேர்வு நடந்தது. இதில், சுமார் 8 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இவர்களில், 1,536 பேர் அடுத்த கட்ட தேர்வு எழுதினர். இதையடுத்து, 964 பேர் தேர்வாகி வகுப்பறை செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

இந்த மூன்று கட்ட தேர்வு முறையில் அதிக மதிப்பெண் பெற்ற மாவட்டத்திற்கு 10 பேர் வீதம் மொத்தம் 380 பேர் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், அதிக மதிப்பெண் பெற்ற 55 பேர் வெளிநாட்டு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். இந்நிலையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

அதன்படி, மரப்பாலம் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஞானபிரகாஷ், கிணத்துக்கடவு பள்ளி பட்டதாரி ஆசிரியை கிருபா மனோன்மணி, ஆலாந்துறை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி கலைவாணன், பொள்ளாச்சி நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி கணித ஆசிரியை இன்ப ஜெயந்தி உள்பட மொத்தம் 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

The post கனவு ஆசிரியர் விருதுக்கு 10 பேர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Tamil Nadu School Education Department ,Dinakaran ,
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...